கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்
ஈரோடு, டிச.16-
ஈரோடு மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு 2021-22ஆம் ஆண்டிற்கு” சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்திட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.
இதன்படி நடப்பாண்டிற்கு டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 முடிய ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முகாம்களில் பங்குபெறும் கால் நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, சுன்டுவாத (CLP) அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைமுறை படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் முகாமில் பங்கேற்கும் கால்நடை வல்லுநர் களிடமிருந்து பதில் பெறலாம். இம்முகாம் களில் கிடேரிகன்று பேரணிநடத்திசிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் படவுள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால் நடைவளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்களது கால் நடைகளுடன் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments