Breaking News

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்..

 காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்..


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஒன்றியங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மிகுந்த ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். 

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட  உள்ளாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்காக லட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். இவருடைய பெயரை தனலட்சுமி என அச்சடித்து வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

பெயர் தவறான காரணத்தினால் தமது வெற்றி பாதிக்கும் என கருதி வேட்பாளரும் அவரது முகவர்களும் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது தவறாக் அச்சடிக்கப்பட்ட அந்த வாக்கு சீட்டில் அழிக்கும் மை கொண்டு பெயர் திருத்தம் செய்து வாக்காளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் அலுவலர்கள் கூறியதற்கு வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மணி நேரமாக வாக்குபதிவை நிறுத்தி வைத்துள்ள தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

இரு தரப்பினரும் சுமூகம் அடைந்த பிறகு 10.05 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது உழவர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

No comments

Thank you for your comments