விறுவிறுப்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது தொடர்ந்து அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி இரு கட்டமாக நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் என ஐந்து ஒன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று ஒன்றியங்களில் 680 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மூன்று ஒன்றியங்களிலும் 1,441 பதவிகளுக்கு 4,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலையில் வாக்களிக்க வந்தவர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாலாஜாபாத் ஒன்றிய 17 வார்டு கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் சுயேட்சை.வேட்பாளர் பிரேமா ரஞ்சித் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.



No comments
Thank you for your comments