Breaking News

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.சத்யா வரிசையில் நின்று வாக்குப்பதிவு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜபாத் ஊராட்சி ஒன்றிய 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.சத்யா சின்னிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது ஓட்டை பதிவு செய்தார். 

இவர், அ.தி.மு.க.,வில் மாநில இளைஞர் அணி இணை செயலாளராகவும் இருந்து வருகிறார். சின்னிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இவரது மனைவி ஜெனிபர் மார்க்ரேட் அ.தி.மு.க., சார்பில் போட்டி இடுகிறார். 

இவரும் தனது ஓட்டை சின்னிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பதிவு செய்தார். 

சின்னிவாக்கம் ஊராட்சியில் காலை முதலே ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது.  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 14வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்திலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

No comments

Thank you for your comments