Breaking News

தொண்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா காலத்தில் சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கல்

த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்சா கவுரவிப்பு

ராமநாதபுரம், அக். 25-

தொண்டியில் கோல்டன் ரோட்டரி சங்கம்  சார்பில் இஸ்லாமிய மாதிரி பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா காலத்தில்   தன்னலம் பாராமல்  அனைத்து மக்களுக்கும் சிறப்பான  மனித நேய சேவை செய்த   தொண்டி த.மு.மு.க., ம.ம.க., நிர்வாகிகளுக்கு  பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.   


ரோட்டரி முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா   தமுமுக மமக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து  நினைவு பரிசு வழங்கினார்.  

மாவட்ட சேர்மன் விருதுகள் குழு அருள்செழியன்,  மண்டல துணை ஆளுனர் நாகராஜன்,  தொண்டி ரோட்டரிதலைவர் சிவராமகிருஸ்னன் செயலாளர் பாபு,ரோட்டரி நிர்வாகிகள் கண்ணன், காத்தராஜா, சேக்மஸ்தான், வீரகுமார், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா,  மாவட்ட செயலர் வழக்கறிஞர் ஜிப்ரி,  காதர் நவர் பாசாகனி, பரக்கத் அலி, மைதின் அன்சாரி ஆகிய தமுமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! 

No comments

Thank you for your comments