Breaking News

உயரம் வளர்ச்சி தடைப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.25-

உயரம் வளர்ச்சி தடைப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உயரம் வளர்ச்சி தடைப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் கரூரான் தலைமையில் உயர வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றவராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்கிடவும், கல்வி வேலைவாய்ப்புக்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கிடவும், உயர வளர்ச்சி தடைப்பட்டோர் வசிக்க ஏற்றவகையில் அரசு வீடுகள் கட்டிக் கொடுத்திடவும், மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கிடவும், மாவட்ட தலைநகரங்களில் உணவு வசதியுடன் கூடிய சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித்தர வேண்டும், அரசுப் பேருந்துகளில் மாவட்ட அளவில் இலவச பேருந்து பயண பாஸ் வழங்கிட வேண்டும், கேலி, கிண்டல் செய்வதை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு நடத்திட வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயரம் வளர்ச்சி தடைபட்டோர் தினத்தை முன்னிட்டு மாநிலம் தழுவிய மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments