பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன்
உடுமலை, அக்.25-
உடுமலை தெற்கு ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் மூணாறு சாலையில் உள்ள பாலத்தில் கீழ் கழிவுகள் சேர்ந்து மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் அதனை சரி செய்து தரக் கோரியும், அங்கன்வாடி சுற்றுச்சுவர் கட்டிடம் பழுதடைந்து உள்ளதையும், ஊர் பொது மயானம் சுற்றுச்சுவர் பழுதடைந்துள்ளதையும் உடனடியாக சரி செய்து தர கோரியும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதையடுத்து, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் (கி) மாவட்டக் கழகச் செயலாளருமான சி.மகேந்திரன், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இன்று (25/10/2021) நடவடிக்கை எடுத்தார்.
இந்நிகழ்வின்போது, உடுமலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், பள்ளபாளையம் கூட்டுறவு சங்கத் தலைவருமான போகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி நந்தகுமார், தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் செந்தில், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஜெயமணி, குறிச்சிக்கோட்டை ஊராட்சி நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, மாரிமுத்து, முருகானந்தம், சுப்பிரமணி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்!


No comments
Thank you for your comments