காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ப.கணேசன் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம், அக். 25 -
காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ப.கணேசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த திவாகர் கடந்த மே மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப் பட்டார். காஞ்சிபுரத்தில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சதீஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக கடந்த 5 மாதங்களாக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்!
இந்நிலையில் சென்னையில் இருந்து மாற்றலாகி வந்த ப.கணேசன் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றி வரும் சக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலரான ப.கணேசனை வரவேற்றனர்.

No comments
Thank you for your comments