Breaking News

வங்கி ஏடிஏம்மில் அடிக்கடி பணம் வராததை சரி செய்ய கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மனு.

வங்கி ஏடிஏம்மில் அடிக்கடி பணம் வராததை சரி செய்ய கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம்  சார்பில் ஸ்டேட் பாங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில்  ஸ்டேட் பாங்க் அமைந்துள்ளது. இங்கு கழுதூர், பாசார், தொண்டங்குறிச்சி, அரியநாச்சி, புல்லூர், ஆலம்பாடி, ஆவட்டி உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கணக்கு வைத்து கொண்டு வரவு செலவு செய்து வருகிறார்கள்.

வங்கிக்கு பணம் எடுக்க நகை அடகு வைக்க மற்றும் பல்வேறு தேவைக்காக வரும் பொதுமக்கள், முதியோர்கள் பமணிநேரம் காத்திருக்கும் அல நிலை உள்ளது.  மேலும் ஏடிஎம் கார்டு பயன்படுத்த தெரியாமல் உள்ளவர்களிடம் கார்டு எடுத்துவந்து பணம் பெற்றுகொள் என்று அவர்களிம் கூறப்படுகிறது இதனால் முதியவர்கள் மற்றும் பலர் மன வேதனை அடைகின்றனர்.

மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் அடிக்கடி பணம் வருவதில்லை  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பணம் எடுக்க வந்து ஏமமாற்றம் அடைந்து வேப்பூர், ஆவட்டி, தொழுதூர் போன்ற பகுதிகளுக்கு பணம் எடுக்க செல்கிறார்கள். 

இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி,  சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் தேசிய தலைவர் தமிழன் மு  ஜெகன் ஆணைக்கிணங்க  மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதலின் பேரில் கடலூர்  மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் மங்களூர் ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமையில் ஸ்டேட் பாங்க் மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

உடன் கடலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் கல்யாணசுந்தரம், மங்களூர் ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் அறிவழகன், மங்களூர் ஒன்றிய தொழிற்சங்க இணைச்செயலாளர் தண்டபாணி, மங்களூர் ஒன்றிய தொழிற்சங்க இணைச்செயலாளர் வெங்கடேசன், கடலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணிசெயலாளர்  பாசார் செல்வேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

No comments

Thank you for your comments