திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தனது குடும்பத்துடன் வாக்களிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு 1வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தனது குடும்பத்துடன் பொதுமக்களுடன் வரிசையாக நின்று தனது குடும்பத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலானது நடைபெறுவதால் வாக்குப்பதிவு சரியாக 7 மணியளவில் துவங்கியது.காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட முட்டவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுக்களுடன் வரிசையாக நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிவித்தும் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்கு எந்த வாகனங்களையும் போலீசார் அனுமதியளிக்காமல் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்துள்ளனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments