உத்தரப்பிரதேச விவசாயிகள் மீது வாகன மோதல்-குஷ்பு கண்டனம்
சென்னை, அக்.6-
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது ஏற்பட்ட வாகன மோதல் சம்பவத்திற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச வன்முறை சம்பவம் குறித்து பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது கடுமையான குற்றம். எந்த விதத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை வேண்டும். மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments