லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட குர்விந்தர் சிங்கின் உடல்கூறு பகுப்பாய்வு அறிக்கை நிராகரிப்பு: மீண்டும் பகுப்பாய்வு
பஹ்ரெய்ச் :
லக்கிம்பூர் கேரியில் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கி பன்வீர்பூர் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குஸ்தி பந்தயம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் மௌரியா வரத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் கோஷமிட்டனர்.
இந்தச் செய்தியை போலீஸ் மூலம் அறிந்த உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் மவுரியா தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
மௌரியாவை வரவேற்று விழா நடக்க இருந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்மிஸ்ராவின் அஷிஷ் வந்திருந்தார்.
உத்திரபிரதேச துணை முதல்வர் வராத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பிய அஷிஷ் மிஸ்ரா சாலையின் இருபுறமும் கூடியிருந்த விவசாயிகள் மீது செலுத்தியதாக கூறப்படுகிறது. விவசாயிகளை நசுக்கிய கார் நிலைதடுமாறி சாய்ந்தபோது காரைச் செலுத்திய அஷிஷ் காரிலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார் அங்கிருந்த விவசாயிகளில் ஒருவரான குர்விந்தர் சிங் பிடிக்க முயன்றார். அவரை மத்திய அமைச்சரின் மகன் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டார்.
குர்விந்தர் சிங் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார். மத்திய அமைச்சரின் மகள் அங்கிருந்து தப்பி ஓடி கரும்புத் தோட்டத்திற்குள் ஒளிந்திருந்து, பின்னர் போலீஸ் உதவியுடன் தப்பிச் சென்று விட்டார்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தை பார்த்த ஹரிசிங் என்பவர் போலீஸாரிடம் துப்பாக்கிச்சூடு பற்றி புகார் செய்து மனு கொடுத்திருக்கிறார் அஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றுக்கொள்வதும் பின்னர் அவர் காரில் இருந்து தப்பி ஓடுவதும் அவரைப் பிடித்தகுர்விந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் வீடியோவாக சமூக இணைய தளங்களில் வெளி வந்துள்ளன.
கொல்லப்பட்ட விவசாயிகள்
1. லாவ் பிரீத் சிங் (19).
2. நச்சட்டார் சிங் (65),
3. தவ்ஹித் சிங் (42),
4. குர்விந்தர் சிங் (22)
ஆகியோருடைய உடற்கூறு பகுப்பாய்வு அறிக்கைகள் செவ்வாயன்று வந்து சேர்ந்தன.
குர்விந்தர்சிங்கின் உடற்கூறு பகுப்பாய்வு அறிக்கையை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். குர்விந்தர்சிங்கின் நெற்றியில் இருந்த துப்பாக்கிக் குண்டு காயத்தை உடல்கூறு பகுப்பாய்வு அறிக்கை முழுக்க மறைத்துவிட்டது. உடல் உள் காயங்கள் காரணமாக குர்விந்தர்சிங் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமைச்சரின் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தையே முழுக்க மறைக்க முயற்சி நடப்பதாக விவசாயின் குடும்பத்தார் புகார் தெரிவித்தனர். இரண்டாவது பகுப்பாய்வு புதிய மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும் என்று குர்விந்தர் சிங்கின் குடும்பத்தார் கூறினார்கள்.
விவசாயிகளின் கூட்டமைப்பு ஆகிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பும் பகுப்பாய்வு அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தது.
குர்விந்தர் சிங்கின் உடலைக் கொண்டுபோய் இறுதிச் சடங்கு செய்ய மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச அரசு அவசர அவசரமாக இரண்டாவது உடற்கூறு பகுப்பாய்வுக்கு ஏற்பாடு செய்தது.
இந்த இரண்டாவது பகுப்பாய்வு பஹ்ரெய்ச் நகரிலேயே நடத்த முடிவு செய்தனர். ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் மருத்துவர்கள் பஹ்ரெய்ச் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இரண்டாவது உடற்கூறு பகுப்பாய்வைத் தொடங்கியுள்ளனர்.

No comments
Thank you for your comments