Breaking News

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மூன்றின் விலையும் ஒரேநாளில் உயர்வு

புதுடெல்லி:

இந்தியாவின் அனைத்து பிரிவு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு பெட்ரோல், டீசல் ஆகிய மூன்றின் விலையும் ஒரே நாளில் இன்று உயர்த்தப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 15 உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 35 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

இந்த மூன்றையும் யாராவது ஒருவர் இன்று பயன்படுத்தினால் அவர் 15 ரூபாய் 65 பைசா கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும்.

உயர்த்தப்பட்டுள்ள விலை விவரங்கள் வருமாறு:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது மானிய விலை சிலிண்டர்களுக்கு தரப்படும் மானியம் விலை மிகவும் குறைந்துவிட்டது.

எல்பிஜி சிலிண்டர்

இந்தப் பின்னணியில் மானியம் இல்லாத 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 900 ரூபாய் 50 பைசாவாக உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் 911 ரூபாயாகும்

மும்பையில் விலை ரூ.899.50 பைசா.

தில்லியில் விலை ரூ.899 50 பைசா.

மும்பையிலும் டெல்லியிலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒன்றாக உள்ளது.

பெட்ரோல்

இன்று அறிவிக்கப்பட்ட 30 பைசா உயர்வுடன்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.49.

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.65.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.96.

டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.94.

டீசல்

இன்று அறிவிக்கப்பட்ட 35 பைசா உயர்வுடன்

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.93.

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல்  விலை ரூ.94.53.

மும்பையில் ஒரு லிட்டர் டீசல்  விலை ரூ.99.17.

டில்லியில் ஒரு லிட்டர் டீசல்  விலை ரூ.91.42.

தொடர்ந்து விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் ஏறிக்கொண்டே செல்கின்றது  என்று  அப்பாவி பொதுமக்கள் புலம்பிவருகின்றனர். 


 

No comments

Thank you for your comments