Breaking News

பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் அலுவலர்களுக்கு பணியிடமாற்றம்

சென்னை;

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் அலுவலர்களை வெவ்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வணிகவரித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வணிகவரித் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன் ஓர் அங்கமாக  பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் அலுவலர்களுக்கு பணியிடமாற்றம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே மண்டலத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக பணி புரிந்து வந்த முப்பது ஓட்டுநர்களை வெவ்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வணிகவரித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

வணிகவரித் துறையின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

இவ்வாறு,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments