Breaking News

மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி சார் ஆட்சியரிடம் மனு

திட்டக்குடி:

திட்டக்குடி வட்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி வட்டத்தில் இறையூரில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக்கோரி ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சின்னதுரை தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது, திட்டக்குடி வட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாட்டுவண்டி தொழிலை நம்பி தான் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திட்டக்குடி வட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் இடம் மனு அளித்துள்ளனர்.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

இதில் மாட்டுவண்டி CPI கௌரவத் தலைவர் தமிழரசன், திட்டக்குடி ATUC வட்டத் தலைவர் ராஜேஷ், வட்டச் செயலாளர் செல்வராஜ்,  வட்ட துணைத் தலைவர் செல்வம்,  சின்னத்துரை, நாராயணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments