Breaking News

பாமகவில் இருந்து வெளியேறிய பலர் இன்றளவும் செல்லா காசுகளாக உள்ளனர்...!

தருமபுரி

பாமகவில் இருந்து வெளியேறிய பலர் இன்றளவும் செல்லா காசுகளாக உள்ளனர். எனவே, கட்சியில் இருந்து வெளியேறும் நபர்களால் பாமகவுக்கு எந்த பாதிப்பு இல்லை  என்று  தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமி, பாமக கிழக்கு மாவட்ட செயலர் பி.வி.செந்தில் ஆகியோர் தெரிவித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து யார் விலகினாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமி, பாமக கிழக்கு மாவட்ட செயலர் பி.வி.செந்தில் ஆகியோர் தெரிவித்தனர்.

அரூரில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமி, மாவட்ட செயலர் பி.வி.செந்தில் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கூட்டாக அளித்த பேட்டி அளித்தனர்.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

அப்போது கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தருமபுரி (கிழக்கு) மாவட்ட செயலாளராக இருந்த அ.சத்தியமூர்த்தி தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.  அவர் கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அ.சத்தியமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டார்

பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும். 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணி மாநிலத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் முன்னாள் மாவட்ட செயலர்  அ. சத்தியமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். 

பாமகவை விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் ரீதியாக பாமக தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு பல்வேறு உரிமைகள், சலுகைகள் கிடைக்க பாடுபட்ட கட்சி பாமக. பாமகவில் இருந்து வெளியேறிய பலர் இன்றளவும் செல்லா காசுகளாக உள்ளனர். எனவே, கட்சியில் இருந்து வெளியேறும் நபர்களால் பாமகவுக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்தனர்.

இதில், வன்னியர் சங்க மாநில செயலர் இரா.அரசாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.திருவேங்கடம், உழவர் பேரியக்க மாநில துணைச் செயலர் சி.முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments