சுமார் 35,000 நெல் மூட்டைகள் மழையில் நினைந்து சேதம்..!
காஞ்சிபுரம், அக்.6-
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள கட்டவாக்கம் பகுதியில் இயங்கி வரும், திறந்தவெளி சேமிப்பு மையத்தில் முறையாக நெல் மூட்டைகளை மூடி வைக்காததால், மழையில் நினைந்து சுமார் 35,000 நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள கட்டவாக்கம் பகுதியில், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் திறந்தவெளி சேமிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் தற்போது ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 254 மெட்ரிக் டான்நெல் உள்ளது . காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜபத் ஒன்றியத்துக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்காடு ,தென்னேரி, கட்டவாக்கம், ஐம்பொன்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆறு மணி நேரமாக தொடர் மழை காரணமாக சாலையில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. அந்த வழியில் அடுக்கி வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வரும் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதலே சாரல் மழை செய்யத் துவங்கி காலை 8 மணி முதல் கனமழை பெய்து வருகிறது தொடர்ந்து ஏழு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் நகர சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ள நீர் போல ஓடோடி வாகன ஓட்டிகளுக்கு கொடுத்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் சாலையோரம் கால்வாய்கள் தூர் வாரப்படாத இந்நிலை ஏற்பட்டுள்ளது.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி, திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்படும் குடோன்கள் எதுவும் மாற்றம் செய்யாமல் இருந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் பெய்யும் தொடர் கனமழை காரணமாக மழையில் நனைந்து சேறாகி கண்டு விவசாயிகள் வருத்தம் அடைகின்றனர். கட்டவாக்கம் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அரசுக்கு நேரடியாக 4 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, நெல் மூட்டைகளை மூடி வைக்காத காரணத்தினால், அலட்சியத்தின் காரணமாக தற்பொழுது நெல் மூட்டைகள் வீன் ஆகியுள்ளன.
No comments
Thank you for your comments