‘எம்.பி., எங்கே? எம்.எல்.ஏ., எங்கே? அரசு என்ன செய்கிறது?’ - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
தருமபுரி :
சீலநாயக்கனூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். உலகமயமான தகவல் தொடர்பு வளர்ச்சியிலும், இக்கிராமத்தில் இதுவரை ஒரு செல்போன் டவரும் அமைக்கப்படாதது மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
ரேஷன் அரிசி வாங்குவது முதல் கல்வி சான்றிதழ்கள் பெறுவது வரை, மொபைல் வசதி இல்லாததால் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அவசர வேளைகளில் 108 ஆம்புலன்ஸ் அல்லது பிற உதவிகளை அழைக்க முடியாத நிலையும் நிலவுகிறது.
இந்த நிலை குறித்து பொதுமக்கள் பலமுறை பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று அவர்கள் காலை 7 மணி முதல் சீலநாயக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் ‘எம்பி எங்கே, எம்எல்ஏ எங்கே, அரசு என்ன செய்கிறது?’ என கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த ஏரியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments