Breaking News

பெண் கழுத்தறுக்கப்பட்டு சாலையில் வீசிய கொடூரம்

தர்மபுரி :

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கம்மநாயக்கனள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை அந்த வழியாக செல்லும் பயணிகள் சாலையோரத்தில் பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


தகவலின் பேரில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். 


சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெண்ணின் அடையாளம், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பதையும், 

அல்லது வேறு காரணமா என்பதையும் பல்வேறு கோணங்களில் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.


சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 

பெண் கழுத்தறுக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments