Breaking News

இடுப்பளவு தண்ணீரில் குடித்தனம் நடத்தும் அவலம் The misery of living in waist-deep water


இடுப்பளவு தண்ணீரில் குடித்தனம் நடத்தும் பெண்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர்மேடு அருந்ததி பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீருடன் கலந்த கழிவு நீர் புகுந்தது..

குடியிருப்பு பகுதியில் இடுப்பளவு நீரில் தவித்து வரும் குடியிருப்பு வாசிகள்


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டுக்குட்பட்ட பல்லவர் மேடு அருந்ததி பாளையம் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 



இந்த நிலையில் இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு பருவமழைக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழை நீரும், அங்குள்ள கழிவுநீர் மேனுவல்களில் இருந்து கழிவு நீரும் கலந்து மழை நீருடன் கலந்த கழிவுநீராக அப்பகுதியில் தேங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முதல் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் தற்போது இப்பகுதியில் மழை நீருடன் கலந்த கழிவு நீரானது அப்பகுதியில் இடுப்பளவு தேங்கி நின்று வருகிறது. 

 

மேலும் பல்வேறு வீடுகளில் நீரானது ஒப்புகுந்து வீடுகள் முழுவதும் நீரினால் சூழப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அங்கேயே வசிக்கும் அவல நிலையானது ஏற்பட்டுள்ளது. 

மேலும் தங்களுக்கு தேவையான உணவுகளையும் இடுப்பளவு தண்ணீரிலேயே நின்று சமைக்கும் நிலைக்கும் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இப்பகுதியில் ஆண்டு தோறும் பருவமடையில் இத்தகைய நிலையே நீடித்து வருவதாக வேதனை தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு இல்லையா என ஏக்கத்துடன் கண்ணீர் விடக்கூடிய காட்சிகளும் பார்க்க முடிகிறது. 

ஆகவே இது குறித்து முறையாக மாவட்ட நிர்வாகமும்,காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக மழை நீருடன் கலந்த கழிவு நீரினை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றிடவும் இதற்கு ஓர் நிரந்தர தீர்வு கண்டிடவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



No comments

Thank you for your comments