அரூர் மீனவர் பேட்டையில் சாக்கடை வசதி கோரி சாலை மறியல்
தர்மபுரி:
பல ஆண்டுகளாக மீனவர் பேட்டையில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் வீதிகள் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், மலேரியா மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவி வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடும் நீடிப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பலமுறை நகராட்சிக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய மக்கள், இன்று காலை அரூர்–திருவண்ணாமலை முக்கியச் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அரூர் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், “நமது பகுதியில் திமுக வார்டு கவுன்சிலர் புறக்கணித்து வருகிறார்,” என பொதுமக்கள் ஆணையரிடம் குறைகளை தெரிவித்தனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
பின்னர், ஆணையர் ஹேமலதா, மக்கள் உடன் சேர்ந்து மீனவர் பேட்டை பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,
“சாக்கடை கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,”என உறுதியளித்தார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇மேலும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நகராட்சியிடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என்றும், சாலை மறியல்கள் மூலம் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த சாலை மறியலால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், ஆணையர் அளித்த உறுதிமொழியின் பேரில் மக்கள் மறியலை வாபஸ் பெற்றனர்.
🌿 SPS A4 Size 2D Ring Binder File, Office File for Certificates and Documents, Matte - Pack of 4 -Deal with GST Savings-Above 60% Offer Price
Deal with GST Savings ✨ | Amazon's Choice |a Fulfilled | Buy - Save Money Now
🛒 Buy Now on Amazon


No comments
Thank you for your comments