முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் 94வது பிறந்தநாள் கொண்டாட்டம்...!
அனைத்து இந்திய கலாம் கனவு அறக்கட்டளை தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூரில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 94வது பிறந்தநாளை பொதுமக்களுடன் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் சென்னையன் வரவேற்புரை வழங்கினார் மற்றும் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க தேசிய செயலாளர் முனைவர்.வினோத் அவர்கள் அப்துல் கலாம் பற்றி மக்களிடம் சிறப்புரை யாற்றினார்.
இவ்விழாவானது சுப்பிரமணி, நாகராஜ், கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக செல்வம் ஒன்றிய செயலாளர்,அதிமுக மற்றும் இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் குமார்,வணிகர் சங்கம், அன்சர், ஜெட்லி செல்வம்,சாமிக்கண்ணு முனிராஜ் பெங்களூர், சுரேஷ்,கலக்கா குமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அப்துல் கலாம் ஐயா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments
Thank you for your comments