"சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை" — தர்மபுரியில் திருமாவளவன்
தர்மபுரி:
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நிதியாக தர்மபுரி மாவட்டம் சார்பில் மொத்தம் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அதில் ஏற்கனவே அரூரில் 30 லட்சம் ரூபாய் மற்றும் தற்போதைய கூட்டத்தில் 50 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டதாகவும், மேலும் 20 லட்சம் ரூபாயை விரைவில் வழங்கப்படும் என்றும் மாவட்டச் செயலர்கள் தெரிவித்தனர்.
திருமாவளவன் தனது உரையில்,
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது.நமது நோக்கம் அதிகார நாற்காலி அல்ல, சமூக சமத்துவத்தை கட்டமைப்பதே.நாங்கள் தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருப்பது தேர்தல் சீட்டுக்காக அல்ல. எங்களுக்கு வேண்டியது அதிகாரம் அல்ல; மதிப்பும் சமத்துவமும் கொண்ட அரசியல் சூழல் தான்,”என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“சிலர் நமக்குச் சீட்டுகள் அதிகம் தருவதாக கூறினாலும், நாங்கள் அதற்காக கொள்கையை விற்பனை செய்ய மாட்டோம்.தற்போது நாட்டில் உருவாகியிருக்கும் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க. தான் காரணம். அந்த ஆட்சியை வீழ்த்த, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி நமக்கு தேவை,”என்றார்.
திருமாவளவன், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசும்போது,
“நடிகர்கள் கட்சி தொடங்கினால் நம்மை சீண்டுகிறார்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோதும், விஜய் அரசியலுக்கு வந்தபோதும், நான் பதற்றமடைகிறேன் எனச் சொல்கிறார்கள். இது நம்மை குறைத்து மதிப்பிடும் பழக்கம்.விஜய் கட்சி தொடங்கியதும் தலித்துகள் அவரை பின்பற்றுவார்கள் என கூறுவது அவமானகரமானது,”என்று விமர்சித்தார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
அவர் மேலும்,
“நமது கட்சியில் இருவர் மீது நடவடிக்கை எடுத்ததும், சிலர் சங்பரிவார் அமைப்புடன் சேர்ந்து, சங்கியாக மாறிவிட்டனர். இது அவர்களது சிந்தனை துரோகம்,”என்றும் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தல் குறித்து அவர் கூறியதாவது:
“இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியை தோற்கடிப்பதே த.வெ.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் நோக்கம். அதுதான் பா.ஜ.க-வின் மறைமுக நோக்கம்.ஆனால் திராவிட அரசியலுக்கு பாதுகாப்பு அரணாக நிற்கும் கட்சி — விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான்,”என்று உறுதியுடன் தெரிவித்தார்.
🌿 SPS A4 Size 2D Ring Binder File, Office File for Certificates and Documents, Matte - Pack of 4 -Deal with GST Savings-Above 60% Offer Price
Deal with GST Savings ✨ | Amazon's Choic |a Fulfilled | -66%
🛒 Buy Now on Amazon


No comments
Thank you for your comments