Breaking News

சந்திர கிரகணத்தின் போது ஆட்டுக்கல்லில் உலக்கை நேராக நின்ற அதிசயம் – தருமபுரி கிராமத்தில் ஆச்சரியம்



தருமபுரி :

சந்திர கிரகணத்தின் போது அற்புத காட்சி ஒன்று தருமபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற சந்திர கிரகணம் இரவு 9.45 மணி முதல் 1.30 மணி வரை நீடித்தது. அந்த நேரத்தில் ஆட்டுக்கல்லில் (grinding stone) உலக்கையை (pestle) வைத்தால் அது கீழே விழாமல் நேராக செங்குத்தாக நிற்கும் என்று கிராம மக்கள் அனுபவத்தில் உணர்ந்தனர்.

கிரகணம் முடிந்ததும், ஆட்டுக்கல்லில் வைக்கப்பட்ட உலக்கை தானாகவே கீழே விழுந்துவிடும் என்பதும் அங்கேயுள்ள மக்களின் கூற்றாகும்.

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!


இந்த அதிசயத்தை தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் மாதேஸ் – அங்கம்மாள் இல்லத்தில் சோதனை செய்து பார்த்தனர். கிரகண நேரத்தில் உண்மையிலேயே உலக்கை ஆட்டுக்கல்லில் நேராக நின்றது.

இதைப் பார்த்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆச்சரியப்பட்டு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.




No comments

Thank you for your comments