மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தனது இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி – அதிகாரிகள் சமரசம் -
காஞ்சிபுரம் :
கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுவின் மனைவி சசிகலா (35), தனது குழந்தைகள் திவானி (6), லாதுகான் (2) ஆகியோருடன் குறை தீர்க்கும் கூட்ட அரங்கின் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக தலையிட்டு பெண்ணையும், குழந்தைகளையும் காப்பாற்றினர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சசிகலா மற்றும் குழந்தைகள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
No comments
Thank you for your comments