Breaking News

பாலக்கோடு 14 ஏரிகளுக்கான உபநீர் கால்வாய் திட்டம் பாதியிலே நிறுத்தம் – விவசாயிகள் வேதனை

தருமபுரி :

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  எர்ரனஅள்ளியில் - ஜெர்த்தலாவ் கால்வாய் திட்டம்   5 கிலோ மீட்டரிலிருந்து  புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட  14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி  ரூ.30.38 கோடி மதிப்பீட்டில் கடந்த 2022ம் ஆண்டு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.


பணியில் சுணக்கம்

நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில்  5 கிலோ மீட்டர் தூரம் உள்ள கால்வாய் இணைப்பை முழுமையாக முடிக்காமல் கால்வாய் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கப்படாமல் நீர் கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்கு ஆண்டு காலமாக பருவ மழை பொழிந்து சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடலில் கலந்த நிலையில் தற்போது வரை நீர்வழி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் பாதியிலே நிறுத்த பட்டுள்ளதால், கால்வாய் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இப்பகுதியில் விளைவிக்கக் கூடிய காய்கறி, பழம், பூ, கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்டவை கடும் வறட்சியால் பெரும் பாதிப்பை அடைந்து வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழக அரசு கல்வாய் திட்டத்தை உடனடியாக முடித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சமூக ஆர்வலர்  சிவா :

"இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்வாயை முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் சிவா  வலியுறுத்தி உள்ளார். 


Pulikarai Lake sub-water canal project in Dharmapuri halted midway, farmers demand completion


No comments

Thank you for your comments