தருமபுரி மாவட்டம் – மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு: அரூரில் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை செவிசாய்க்காத பட்சத்தில் இறப்பு சான்றுகளை வழங்க வேண்டும்
தருமபுரி மாவட்டம் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டுமனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம், தமிழக அரசின் ஆணைப்படி பேரூராட்சி பகுதிகளில் பெட்டிக்கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி அரூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கடந்த எட்டு மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தங்களை கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது பேசிய மாற்றுத்திறனாளி பெண் சபானா கூறுவையில், ஏற்கனவே நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடத்தி தங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை,
தற்போது ஐந்தாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளோம். தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் மாற்றுத்திறனாளிகளை இறந்ததாக கருதி இறப்புச் சான்று வழங்கினால்
இனி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடந்து போவதில்லை, அதேபோல அரூர் பேரூராட்சி அலுவலர்கள் தங்களை நாயை விட கேவலமாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கும் இவர் தங்களின் வாழ்வாதாரத்திற்கு கோவில் குளம், சர்ச், மசூதி போன்ற பகுதிகளில் பிச்சை எடுத்து பிழைப்பை நடத்திக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
அரசு ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்குவதற்காக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.


No comments
Thank you for your comments