Breaking News

தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து

ஓசூர் அருகே பெங்களூர்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து நடைபெற்றது.


ஓசூர் அருகே பெங்களூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் என்ற இடத்தில் மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. 

இதனால் அந்தப் பகுதியில் அவ்வப்போது  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையும் உருவாகிறது.

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் சரக்கு லாரி ஒன்று முன்னால் சென்ற கார்கள் மீது மோதிய  விபத்தில் லாரி அதன் முன்னே சென்ற 5 கார்கள் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் கார்களில் சென்ற பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உயிர் தப்பினர். 

அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து நடந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் அட்கோ போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments