தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையின் அவலம்: உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவர் இல்லை – உறவினர்கள் போராட்டம்!
தருமபுரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (45), ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என்ஜினியர். திருமணமாகி மனைவி மகாலட்சுமி, இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
நேற்று நண்பர்களுடன் ஒகேனக்கல் சுற்றுலா சென்றிருந்த அவர், தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
உறவினர்கள் உடற்கூறு ஆய்வு செய்ய கோரியபோது, மருத்துவர்கள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உறவினர்கள் “இங்கேயே உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்; இல்லையெனில் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி சமூக ஆர்வலர்களும் மருத்துவர்கள் இல்லாமை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். “தருமபுரி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் பென்னாகரத்தில் கூட உரிய மருத்துவர்கள் இல்லை என்பது மக்களின் உயிர் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
No comments
Thank you for your comments