கெலவரப்பள்ளி அணையில் வெள்ளப்பெருக்கு நீருடன் இரசாயன நுரைகள் – மக்களின் உயிருக்கு ஆபத்தா?
- கனமழை ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் இரசாயன நுரைகள்
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், அதேபோல ஓசூர் பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையால் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 1150 கன அடி நீர் வினாடிக்கு வரத்தாக உள்ளது. அணையில் இருந்து 1015 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும் தற்போது அணையில் 41.98 அடிவரை நீர் சேமிப்பில் உள்ளது.
அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறும் இடத்தில் கடும் துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக இரசாயன நுரைகள் வெளியேறி வருகிறது.
மழைக்காலங்களில் இரசாயன நுரைகள் தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக செல்வது ஓசூர் பகுதி மக்களுக்கு வாடிக்கையாகி விட்டாலும் தொடர்ச்சியாக இது போன்று இரசாயன கழிவுகள் அணைக்கு வருவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் ஓசூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments