ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் கைது!
இந்த நிலையில், அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம், தகாத வார்த்தைகள் பேசுதல் உட்பட பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், மாணவியின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், சந்தேக நபர் விணுலோகேஸ்வரன் மீது போக்ஸோ (POCSO) சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments
Thank you for your comments