Breaking News

காஞ்சிபுரத்தில் உயர்வுக்குப்படி நிகழ்ச்சியை ஆட்சியர் தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஆக.23:

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உயர்வுக்கு படி நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்து உயர்படிப்புக்கு தேர்வானவர்களுக்கு சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.


காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர்வுக்கு படி நிகழ்ச்சிக்காக உயர்கல்வி வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த அரங்குகளில் உயர்கல்வி படிக்கத் தேவையான கடன் வசதிகள், நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள், காஞ்சிபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்படிப்புக்கு உள்ள காலியிடங்களுக்கான விபரங்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆகியனவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வழிகாட்டுதலின்படி உயர்கல்வி படிப்பதற்காக மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.

இதன் பின்னர் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசுகையில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக கல்லூரிக்கனவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். 

நிகழ் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஏதுவாக உயர்வுக்கு படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், இந்நிகழ்வில் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அவரவர்களுக்கான விருப்ப படிப்பை தேர்வு செய்து பயன்பெ"றுமாறும் ஆட்சியர் பேசினார்.

உயர்வுக்கு படி நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக்அலி,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

No comments

Thank you for your comments