Breaking News

தருமபுரி மலை கிராமத்தில் 79 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடிய மக்கள்

 தருமபுரி, ஆக.16:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பண்ணப்பட்டி மலை கிராமத்தில், சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.


அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியை கடந்து சென்று வர வேண்டியுள்ளது.

இன்று 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பண்ணப்பட்டி கிராம மக்கள் முதல்முறையாக மரத்தில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகளை வழங்கி, சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளாகியும், தங்களது கிராமத்தில் முதல்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், மலைவாழ் இப்பழங்குடியினர் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments