Breaking News

அங்கம்பாக்கம் பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு



நேற்றைய தினம் அங்கம்பாக்கம் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அங்கம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) திருமதி S. ஜெயலட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த கல்வி ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ–மாணவிகளுக்கும், தற்போது “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசு மாதிரிப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவி கோ. லோகமித்ராவிற்கும், ரூ.1100 மதிப்பில் திருக்குறள் நூல்கள் வழங்கி பாராட்டினர்.

மேலும், சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், VAO ஜெயலட்சுமி அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி மாணவ–மாணவிகள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments