Breaking News

காஞ்சிபுரத்தில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி விழா

 காஞ்சிபுரம், ஆக.16:

காஞ்சிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.



உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆகியவை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் நிறுவப்பட்டவை. இவ்வமைப்புகள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எளிய முறையில் உடற்பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி விழா காஞ்சிபுரம் செவிலிமேடு அதியமான் நகரில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்றது. விழாவிற்கு அறிவுத்திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் ஏ. இளங்கோவன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலாளர் கே. எஸ். சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார்.

உடற்பயிற்சி மற்றும் தியானப் பயிற்சியின் சிறப்புகளை முதுநிலை பேராசிரியர் சேர்மா. செல்வராஜ் விளக்கினார். அறக்கட்டளையின் பொருளாளர் எஸ். செந்தில்நாயகம் நன்றியுரையாற்றினார். தியானப் பயிற்சியை முடித்த 100க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


The 115th Jayanthi of Vedathiri Maharishi, founder of World Community Service Center and Manavalakkalai Trust, was celebrated at Kanchipuram’s Arivuthirukoil with meditation events.

No comments

Thank you for your comments