ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சில காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து-பொதுமக்கள் குமுறல்
ஆவடி:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த மக்கள் குறை தீர்ப்பு முகாம் காவலர்களும் நடத்த வேண்டும் என்கின்ற ஆணை பிறப்பித்தமைக்கு திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் நன்றியினை தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஆவடி ஆணை ரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் அதிக அளவு கட்டப்பஞ்சாயத்துக்கள் நடப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தால், அவர்களின் புகார் மீது முறையான விசாரணை நடப்பதில்லை என்றும், எதிர் மனுதாரர் வழக்கறிஞர்கள் மூலம் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், அவர்களுக்கு சாதகமாக காவல்துறையினரும் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
காவல் துறையினர், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் பாதிக்கப்பட்டவருக்கு முறையான விசாரணை நடத்தாமல் அவர்களை மிரட்டுவதாகவும், மேலும் அவர்கள் மனது துன்புறும் அளவுக்கு காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்
காவல்துறையினர் பொதுமக்களிடம் விசாரணை செய்யும் போது அங்கு ரெக்கார்டிங் உள்ள கேமரா அறையில் விசாரணை செய்தால் முறையாக இருக்கும் என்பதும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
காவல்துறையிகளில் அதிக அளவு கட்டப்பஞ்சாயத்து நடப்பதன் காரணமாகத்தான் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று மனுக்களை அளித்து வருகின்றனர் இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கிடைக்கிறது என்றும் தெரிவித்தனர்
காவல் ஆணையர் சங்கர் அவர்கள் போதை விழிப்புணர்வுக்காக ஆங்காங்கு கூட்டங்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் காவல் நிலையங்களில் போதைப் பொருள் விற்பவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு நிர்வாகத்தில், காவல் நிலையங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க மிக முக்கியமான இடமாக உள்ளன. ஆனால், சில நேரங்களில், பொது மக்களுக்கிடையே காவல் துறை தக்க நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டுவிடுவதாகவும், சில புகார்களுக்கு உரிய கவனம் அளிக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால், பொது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு வலிமையான சட்ட அமைப்பாக காவல்துறை செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள போலீஸ் கன்வென்ஷன் ஹாலில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்
True
ReplyDelete