5 இடங்களில் புதிய மின்மாற்றி - பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ. எழிலரசன்
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் மாநகராட்சியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின் பயன்பாடு அதிகமாகி வருகின்றன. இதனால், குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுக்குறித்து அறிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் உடனடியாக குறைந்த மின் அழுத்தம் ஏற்படும் இடங்களில் புதிய மின் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வீதி,பஞ்சுப்பேட்டை பெரிய தெரு ஒலிமுகமது பேட்டை, கங்கை அம்மன் கோவில் தெரு ஆகிய 5 பகுதிகளில் சுமார் 15.86 லட்சம் மதிப்பீட்டில் 25 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய மின்மாற்றியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ்,பகுதி செயலாளர் திலகர், மின்சார துறை அதிகாரிகள் இளையராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments