திமுக பவள விழா பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் எ.வ. வேலு தா.மோ. அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு
காஞ்சிபுரம் :
கூட்டத்தில் சுமார் 50,000 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ வேலு ஆய்வு ஆகியோர் மேடை , பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பவள பொதுக்கூட்டத்திற்கு வரும் திமுகவினருக்கு குடிநீர், கழிவறை வசதிகள், இருக்கை, மற்றும் மின்விசிறி வசதிகள் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்வது பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் முகப்பில் அமைக்கப்பட உள்ள தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மு. கருணாநிதி போன்றவர்களின் படங்களை முகப்பில் வைக்கவும் அதைத்தொடர்ந்து முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் படங்களையும் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகன்றன.
இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் தொகுதி வக்கீல் ஏழிலரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார், சேகர்.குமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், பகுதி செயலாளர்கள் சந்துரு ,தசரதன், வெங்கடேசன், திலகர், மாநகர நகராட்சி கவுன்சிலர்கள், சுரேஷ், கமலக்கண்ணன், த.விசுவநாதன், நிர்வாகிகள் மலர்மன்னன் பொண்ணா என்கின்ற வெங்கடேசன், என்கின்ற வெங்கடேசன், இ. ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments