பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதி - திருப்புட்குழி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை
காஞ்சிபுரம், மார்ச் 4-
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:-
நாங்கள் காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்ச்சிறுணை பெருகல் கிராமத்தில் வசித்து வருகிறோம்.எங்கள் கிராமத்திலிருந்து நாங்கள் படிக்கும் பள்ளிக்கு செல்ல கடந்த 15 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை.
இதனால் பள்ளிக்கு சென்று முறையாக கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.எனவே தினசரி 5 கி.மீ.தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் எங்களுக்காகவும், கிராம பொதுமக்களின் நலன் கருதியும் உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
படவிளக்கம்: பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி கேட்டு ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள்
No comments
Thank you for your comments