2024-2025ஆம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கையை தொடங்கி வைத்தார் ஆட்சியர் கலைசெல்வி மோகன்
காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (04.03.2024) 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப்பகுதியில் உள்ள 3 அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற பள்ளிகளில் (LKG, UKG) படிக்கும் மாணவர்களில் 24 பேர் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பூங்கொத்து, நோட்டு, கற்பலகை, எழுதுப்பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து மிகச்சிறப்பாக வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில் 5+ வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் 3702 பேர்கள் படிக்கின்றனர். அவ்வாறு அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்து வரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைத்து மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும் வேறு பள்ளிகளில் (LKG, UKG பயிலும் 5+ வயது பூர்த்தியடைந்த) பயிலும் மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்து மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வெ.வெற்றிச்செல்வி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமதி. நளினி, ஆசிரியர்கள், மாணவ/மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments