Breaking News

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரம்,மார்ச் 4:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீர் செல்வம், முன்னாள் எம்எல்ஏ கே.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு,போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம், எம்ஜிஆர் இளைஞர் அணியின் செயலாளர் எஸ்எஸ்ஆர்.சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அத்திவாக்கம் ரமேஷ், தும்பவனம் ஜீவானந்தம், மாணவரணி மாவட்ட செயலாளர் திலக் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments