Breaking News

சத்தியமங்கலம் அருகே அபாய நிலையில் பயணிகள் நிழற்கூடம்

சத்தியமங்கலம், செப்.23-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திங்களூர் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மந்தை தொட்டி காடட்டி பிரிவில் உள்ள பயணியர் நிழற்கூடம் உள்ளது. 


இந்த நிழற்கூடம் பழுதடைந்த நிலையில்  பயணிகளுக்கு பயன்படாமல் காட்சியளிக்கிறது. மேலும், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த நிழற்கூடத்தில் நிற்க அச்சமடைகின்றனர்.  இதனால் பஸ்ஸுக்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நின்று அவதிபடும் பரிதாப நிலை உள்ளது. 

இதுகுறித்து, பலமுறை பஞ்சாயத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையில் மேற்கொள்ளவில்லை.  இந்த நிழற்கூடத்தை எம்பி ராசா பார்வையிட்டு  சென்ற பிறகும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிழற்கூடம் இடிந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை அகற்றி புதிய நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Thank you for your comments