சோனா கல்லூரியில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ. முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா
சேலம், செப்.23-
எம்.பி.ஏ. துறைத்தலைவர் அஞ்சனி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், கல்லூரியின் நிர்வாகத்தினர் மற்றும் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சிவக்குமார் பேசும் போது, இந்திய நாட்டில் பல்வேறு துறையில் தொழில் முனைவோர் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. தேசத்தின் வளர்ச்சிக்கும் உங்களின் வளர்ச்சிக்கும் சோனா கல்வி குழுமம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றார் பின்னர் பேசிய சுஜாதா கண்டாய் சோனா கல்லூரி மூலம் உங்கள் முதுநிலை திறன்களை மேம்பட வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தினார்.
கல்லூரியின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா பேசும் போது, சிறந்த மேலாண்மைக் கல்வியோடு சூழலை எதிர்கொள்ளும் தனித்திறனையும் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே இந்த காலகட்டத்தில் நிலைத்து நிற்க முடியும் என்றார். இதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், கல்வி உதவித்தொகை, பிறவசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த விழாவில் சோனா கலை கல்லூரி முதல்வர் ஜி.எம்.காதர்நாவஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். இறுதியாக எம்.சி.ஏ துறைத்தலைவர் பத்மா நன்றியுரையாற்றினார்.

No comments
Thank you for your comments