கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெற மக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வராத மகளிர்கள் ஏழு மணி முதல் 11 மணி வரை காத்திருந்த அவல நிலை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வராத மகளிர்கள் 7 மணி முதல் 11 மணி வரை காத்திருந்தனர் அதிகாரிகள் வராததால் பொதுமக்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கட்சியை பற்றி புலம்ப ஆரம்பித்து விட்டனர்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்
அதில் ஒரு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற திட்டத்தில் மகளிர்கள் ஆயிரம் ரூபாய் பயன் பெற்று வந்தனர்
வராத நபர்களை மீண்டும் மனுக்களை வழங்கி பெறுவதற்காக காலை ஏழு மணி முதல் 11 மணி வரை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்
அதிகாரிகள் 11 மணி வரை வரவில்லை என்று புலம்பும் மகளிர்கள் அதிகாரிகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் சிறந்த முறையில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


No comments
Thank you for your comments