வான்டடா வந்து வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட அண்ணாமலை.... எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் அடுக்கடுக்கான கேள்வி கணைகள்
வான்டடா வந்து வாயக் கொடுத்து மாட்டிக்கிட்ட பேட்டியில் இருந்தும், பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையிலும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களே கொடுத்த தகவல்களின்படியும் கேட்கப்பட்டவை. பதில் வருதா பாப்போம்! என அண்ணாமலைக்கு எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் கேள்வி கணைகள் தொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து இணையத்தில் ஒரு போஸ்ட் வேகமாகப் பரவியது. அதில், 3.48 லட்சத்திற்குக் கடிகாரம் அணியும் ஒரு ஏழை விவசாயிதான் அண்ணாமலை என்று கூறப்பட்டிருந்தது. அண்ணாமலை வாட்ச் போட்டிருக்கும் படமும், அதன் விலையும் இருக்கும் படம் இருந்தது.
இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை வாட்ச் வாங்கியது எப்படி. வாட்ச் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள், திமுகவினர் பலர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.
இந்த போஸ்ட் ட்ரெண்டான நிலையில், இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்....
அதற்குப் பதிலளித்த அவர், "இப்போது புதிதாக நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள். இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்தது அனைவருக்கும் தெரியும். அப்போது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு.. ரபேல் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் இந்த வாட்ச்சில் இருக்கும். எனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் பாக்கியம் கிடைக்கவில்லை..
நான் ஒரு தேசியவாதி.. எனவே, அந்த ரபேல் விமானத்திற்கு இணையாக இருக்கும் இந்த வாட்சை வாங்கிக் கட்டியுள்ளேன். என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும். ரபேல் விமானத்தை உற்பத்தி செய்யும் டஸால்ட் ஏவியேஷன் தான் இந்த வாட்ச்சுகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த வாட்ச்சுகள் உலகில் மொத்தமே 500 தான் இருக்கிறது. எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் நிச்சயம் எனது உடலில் இருக்கும். ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சுகளை இந்தியன் தான் வாங்குவான்.
நமது ரபேல் விமானத்தின் பாகங்களைக் கட்டியுள்ளேன். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி.. பிரிவினைவாதி இல்லை.. ரபேல் நமது நாட்டிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். ரபேல் விமானம் நம்மிடம் வந்த பிறகு தான் போர் யுக்திகள் மாறியுள்ளன. இதன் காரணமாகவே சீனா நம்மிடம் வாலாட்டுவதில்லை. நமது பலம் அதிகரித்துள்ளது. இது எனது தனிப்பட்ட விவகாரம். நான் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை இந்த நிலையில்.. அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச்சுக்கும்.. ரபேல் வாட்ச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி உள்ளனர். இவர் ரபேல் வாட்சையே கட்டி இருந்தால், அந்த வாட்ச் இவருக்கு கிடைத்தது எப்படி என்று கேட்டுள்ளனர். இதற்கிடையே இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான ரசீதை வெளியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை வைத்து இருக்கும் வாட்சை அவருக்கு பரிசாக வழங்கியது யார் என்று திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
Also Read 🔥விஸ்வரூபமான ரபேல் வாட்ச் .. என் சொத்து விவரத்தை நான் வெளியிடுவேன்.. உங்களால முடியுமா? - திமுகவிற்கு சவால் விடுத்த அண்ணாமலை திமுக எம்.பி செந்தில் குமார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 4 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட ரஃபேல் வாட்ச் அணிந்து வருவது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்தார். அதற்கு, திமுகவினர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். திமுகவினர் பாஜகவினர் விவாதம் சமூக வலைதளங்களில் அனல்பறக்கின்றனர். இது ஓய்ந்தபாடில்லை...
Also Read 🔥பாஜக வில் யாருக்குமே அறிவு இருக்காதா? சரி மூன்றாம் வகுப்பு class எடுப்போம்... விளாசிய திமுக எம்.பி இந்நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் ரேர் 'கலெக்சன்' வாட்ச் பிரியர் அண்ணாமலைக்கு சம்மந்தப்பட்ட பிரஸ்மீட் வீடியோவில் இருந்து சில கேள்விகள் #RafaleWatchScam என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது,ரேர் 'கலெக்சன்' வாட்ச் பிரியர் அண்ணாமலைக்கு சம்மந்தப்பட்ட பிரஸ்மீட் வீடியோவில் இருந்து சில கேள்விகள்.
No comments
Thank you for your comments