Breaking News

பாஜக வில் யாருக்குமே அறிவு இருக்காதா? சரி மூன்றாம் வகுப்பு class எடுப்போம்... விளாசிய திமுக எம்.பி

சென்னை : 

பாஜகவில் யாருக்குமே அறிவு இருக்காதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோரைச் சாடியுள்ளார் 



திமுக எம்.பி செந்தில் குமார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 4 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட ரஃபேல் வாட்ச் அணிந்து வருவது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்தார். அதற்கு, திமுகவினர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். 

இந்நிலையில், அண்ணாமலை, தனது சொத்து, வருமான விவரங்களை வெளியிடுவதாகவும், அதேபோலே திமுகவினரும் வெளியிடுவார்களா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு திமுக எம்.பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். 

அப்போது உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டது தொடர்பாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,

 "'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் "ஒன்றிய அரசின்" சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல், இந்திய அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க முடியாது அல்லது தகுதி இழக்க நேரிடும் என்று தெரியுமோ?" என ட்வீட் செய்திருந்தார் நாராயணன்.

திமுக கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது முதலே, மத்தியில் ஆளும் பாஜக அரசை குறிப்பிட 'ஒன்றிய அரசு' என்ற பிரயோகத்தைப் பயன்படுத்தி வருகிறது. முன்பு மத்திய அரசு எனப் பயன்படுத்தி வந்த நிலையில், ஆங்கிலத்தில் இருக்கும் Union Government என்பதனை ஒன்றிய அரசு என்பதாகக் குறிப்பிட்டு வருகின்றனர் திமுகவினர். இதற்கு பாஜகவினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், பாஜகவின் நாராயணன் திருப்பதி உதயநிதி பதவியேற்பு உறுதிமொழி எடுத்ததைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

நாராயணன் திருப்பதியின் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார், "பாஜகவில் யாருக்குமே அறிவு இருக்காதா? சரி மூன்றாம் வகுப்பு கிளாஸ் எடுப்போம் நாட்டின் பெயர்-இந்தியா மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு Union Govt-ஒன்றிய அரசு State Govt-மாநில அரசு மிஸ்டர்.நாராயணா, நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்பு புரியுதோ.. சரி, இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம்" என கிண்டல் செய்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 4 லட்சத்திற்கும் மேல் அதிக விலை உள்ள ரஃபேல் வாட்ச் அணிந்திருந்தது பற்றி திமுகவினர் விமர்சித்த நிலையில், தான் ஒரு தேசியவாதி என்றும், அதனால், ரஃபேல் வாட்ச் அணிந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனை விமர்சித்துள்ள திமுக எம்பி செந்தில்குமார், பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் வாட்ச் அணிவது ஒருவரை பெருமைமிகு இந்திய தேசியவாதியாக உணரவைக்குமா? இன்று ஒரு புதிய தகவல் என கிண்டல் செய்துள்ளார்.


அதேபோல, அண்ணாமலை, தன் மீதான குற்றச்சாட்டைக் களைய சொத்து மற்றும் வருமான விவரங்களை வெளியிடுவதாகவும், திமுகவினரும் வெளியிட தயாரா என்று சவால் விடுத்திருந்தார். அதனை விமர்சித்துள்ள எம்.பி செந்தில்குமார், "ஒரு டவுட்டு.. நீங்க உண்மையிலே முட்டாளா.. இல்ல முட்டாள் போன்று நடிக்கிறீங்களா.. திமுக அமைச்சர்கள்/ எம்.பி/ எம்.எல்.ஏக்களின் வருமான விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இந்த அடிப்படை கூட தெரியாதா? தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் தெரியும். 

ஓ.. ஓகே நாமதான் பி.எல்.சந்தோஷின் நேரடி நியமனம் ஆச்சே.." என விமர்சித்துள்ளார்.

Also Read 🔥விஸ்வரூபமான ரபேல் வாட்ச் .. என் சொத்து விவரத்தை நான் வெளியிடுவேன்.. உங்களால முடியுமா? - திமுகவிற்கு சவால் விடுத்த அண்ணாமலை


No comments

Thank you for your comments