21 – 12 – 2022 அன்று தொழில் துவங்குவதற்காக மானிய கடன்கள் உட்பட விழிப்புணர்வு கூட்டம்
தமிழக அரசு இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக அளிக்கப்படும் மேற்கண்ட அனைத்து துறைகளின் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 21 – 12 – 2022 அன்று காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு மன்றத்தில் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தங்களை தொழில் முனைவோராக உருவாக்கும் பொருட்டு மானியத்துடன் கூடிய சுய தொழில் தொடங்க கடன் திட்டங்களை பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தொழில் மையத்தின் முலம் படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்க பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம் (PMFME) ஆகிய திட்டங்களும் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக மட்டும் கடனுதவி வழங்கும் பொருட்டு THADCO துறையின் கடன் திட்டங்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தபடும் மானிய கடன்கள் நடைமுறையில் உள்ளன.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
மேலும் இன்றைய இளைஞர்கள் தங்களின் தொழில் முனைவோராவதற்கான எண்ணங்களை நிஜமாக்கி செயல்படுத்த சிறப்பான சூழலை ஏற்படுத்த தமிழக அரசின் டான்சிம் (TANSIM) நிறுவனம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் இன்றைய தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்பின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது.
இவ்வாறு தமிழக அரசு இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக அளிக்கப்படும் மேற்கண்ட அனைத்து துறைகளின் திட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 21 – 12 – 2022 அன்று காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு மன்றத்தில் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
அவ்வமயம் கடனுதவி வழங்கும் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்களும், வங்கியாளர்களும் கலந்துகொண்டு திட்டங்களை பற்றி உரையாற்ற உள்ளனர். எனவே, இவ்வறிய வாய்ப்பினை இளைஞர்களும் தொழில்முனைவோர்களும் பொது மக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இக்கூட்டம் குறித்த விவரங்கள் பெற விரும்புவோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு (044/27238837,27236686,27238551) என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி இ. ஆ. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments