நூல்கள் சிந்தனை - ஆகச் சிறந்த வீரன்
நூலின் பெயர் - ஆகச் சிறந்த வீரன்
நூலாசிரியர் - துரை ஆனந்த் குமார்
வகை - சிறுவர் நூல்
பப்ளிகேஷன் - டிஸ்கவரி பப்ளிகேஷன்
மொத்த பக்கங்கள் - 80
விலை - ரூ 100/-
தொ.எண். - 99404 46650
தொகுப்பு - மொத்தம் 12 சிறுவர் கதைகள்
1. மந்திர பந்து - சிறுவர்களின் கனவுகளை கற்பனைகளை நிஜமாக்கி காட்டியிருப்பது அருமை.
2. தங்கச்சங்கிலி - குப்பைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை காட்டில் உள்ள விலங்குகள் மூலம் சொல்லி இருப்பது மிகச் சிறப்பு .
3. மலைமேல் மர்மம் - மன உளைச்சலில் உள்ள ஆசிரியருக்கு படிக்கும் மாணவர்களே பாடம் சொல்லி இயற்கையை உணர்த்தும் கதை.
4. வெள்ளைபுள்ளிகள் - இக்கதையில் மனிதர்களின் நிறம் முக்கியமல்ல நல்ல சிந்தனையும் நல்ல செயல்களும் தான் சிறப்பு என சொல்லும் கதை .
5. பள்ளிக்கு வெளியே - மாணவர்கள் நேர்மையானவர்களாகவும் ஆதாயங்களை தேடி அலைபவர்களாகவும் இருக்கக் கூடாது உங்களின் நேர்மை உலகமே கொண்டாடும் என சிறப்பான கதை .
6. ஆக சிறந்த வீரன் - மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் அன்பு சொல்லி அன்பே உயர்ந்தது என சொல்லும் கதை.
7. அற்புத சொத்து - உழைப்பின் அருமையை சொல்லும் சிறப்பான கதை .
8. ஒரு நல்ல வாய்ப்பு - எப்போதும் சுறுசுறுப்பாகவும் படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும் சோம்பேறித்தனத்தை விட்டுவிடும்படி சொல்லுவது... எதையும் காலத்தே செய்யவேண்டும்... வீணாகும் நேரம் திரும்ப பெற இயலாது.. காலத்தை உணர்த்தும் கதை.
9. நட்சத்திர விருந்து - என்ன எத்தனை மொழிகள் படித்து கற்றுக்கொள்ள தோன்றுகின்றது உனக்கு பிடித்ததை விரும்பி செய் என சொல்லும் கதை .
10. ஒட்டக மந்திரம் - துரித உணவுகளான பீட்சா.. பர்கர் போன்ற உணவுகளால் உடலுக்குத் தீமை என்று சொல்லும் சிறப்பான கதை.
11. தித்திக்கும் தோல்வி - விளையாட்டுக்காககூட தவறுகள் செய்யாமல் நேர்மையாக இருப்பதால் தோல்வியடைவது தவறு இல்லை என சொல்லும் கதை.
12. ஒரு கூடை பழங்கள் - முக்கியமான விழாக்களில் அவசியம் அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என சொல்லும் கதை.
நூல் ஆசிரியர்.. துரை ஆனந்த் குமாருக்கும்.. ஓவியர் ஜெய் அவர்களுக்கும்... தரமான நூல் வடிவமைத்த... டிஸ்கவரி பப்ளிகேஷனுக்கும் வாழ்த்துக்கள். சிறுவர்கள் படிக்க சிறப்பான நூல். மேலும் தொடர்ந்து துரை அவர்கள் நூல்கள் எழுதி வெளியிட வாழ்த்துகிறோம்....!
நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு
வாரம்தோறும் நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002
9360005566

No comments
Thank you for your comments