Breaking News

நூல்கள் சிந்தனை - சாத்கர் அரிசிக்கா

 நூலின் பெயர்: சாத்கர்  அரிசிக்கா

நூல் ஆசிரியர் : சிந்து சீனு

வகை :  குறுநாவல்

பதிப்பு:முதல் பதிப்பு அக்டோபர் 2021 

வெளியீடு : லாவண்யா பதிப்பகம்

மொத்த பக்கங்கள் : 105

விலை : ரூ.275 /-


எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அந்த வேதனையை, மீண்டும் தனது கதைக்களமாக்கி ஒரு குறுநாவலை படைத்துள்ளார் தோழர்  சிந்துசீனு  அவர்கள்.

இம்முறை இன்னும் தீவிரமான, அழுத்தமான கதைக்கருவைச் சுமந்து பிரசவித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஆம், அது தான் உண்மையும் கூட.

மன்னன், குபேரன், முனுசாமி,  மகாலட்சுமி, சுப்ரபாரதி ஆசிரியர், பாலு வாத்தியார், சுமதி, ராமசாமி, பானு, ரேகா, லலிதா, இவர்களெல்லாம் யாரோ எவரோ அல்ல.... அன்றாடம் நாம் சந்திக்கின்ற ஆனால் மிக  எளிதில் நாம் கடந்து போகின்ற மனிதர்கள் தான்.

அவர்களின் துயரை எல்லாம் நாம் ஒரு போதும் பெரிதாக கண்டு கொண்டதே இல்லை. அப்படி கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவாக மண் மலடானது... காற்று மாசானது... தண்ணீர் நஞ்சானது..  அதனால் என்ன... நமக்கு குடிக்க மினரல் பாட்டில் தண்ணீர், சாப்பாட்டிற்கு பாஸ்ட் புட் இருக்கே...... நம் மக்கள் எக்கேடு கெட்டு போனால் நமக்கு என்ன..... ?

இப்படித் தானே நாம் வாழ பழகியுள்ளோம். நம் குழந்தைகளையும் இப்படித் தானே வளர்க்கிறோம்.. எத்தனை சுயநலமாக நாம் உள்ளோம்...... 

இப்படியெல்லாம் நாம் வாழக் கூடாது, பொது நலத்துடன் வாழ வேண்டும் என்று மன்னனும், மகாலட்சுமியும் நமக்கு உணர்த்துகிறார்கள்.

சுயநலமான குழந்தையாக வளரக் கூடாது என்று அரிசிக்கா வழியே உணர்கிறோம்.

பாலு வாத்தியார் போல இந்த மண்ணின் மீது உண்மையான அக்கறையுடன் நாம் வாழ வேண்டும் என்றும்.

இப்படி உயிர்த்துடிப்பான கதை மாந்தர்களைக் காணும் போது நம் கண்களில் கசிவது வெறும் கண்ணீர் மட்டுமல்ல.. இச்சமூகத்தின் மீதான அக்கறையும்.. விடியல் வரும் என்கிற நம்பிக்கையும்...

அரிசிக்காவின் சாதனை என்ன அரிசிக்கா எப்படி சாத்கர் அரிசிக்கா ஆகிறார் என்பதை  தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தோழர்களே,

அவசியம் இந்த புத்தகத்தை வாசித்து இல்லையில்லை வாழ்ந்து பாருங்கள் இந்த புத்தகத்தில்.

தோழர் சிந்து சீனுவிற்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். மேன்மேலும் பல காத்திரமான கதைக்களங்களுடன் இலக்கிய உலகில் தடம் பதிக்க வேண்டி உளப்பூர்வமாய் வாழ்த்துகின்றோம் தோழர்...!

நூல் சிந்தனை கருத்தாளர் : ஏ.ஜெ.அமலா, ஆரணி

நூல்சிந்தனை பகுதிக்கு தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.

 

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி

காலச்சக்கரம் நாளிதழ் 

#54, 3வது குறுக்குத் தெரு, 

டிகேஎம் கல்லூரி பின்புறம்,

கணபதி நகர், வேலூர் - 632002

9360005566

No comments

Thank you for your comments