Breaking News

நூல்கள் சிந்தனை - நவீன அரசியலில் நாயகன்

நூலின் பெயர் - நவீன அரசியலில் நாயகன்

நூலாசிரியர் - விசாகன்

வகை - அரசியல் கட்டுரை 

மொத்த பக்கங்கள்  -  60 

நன்கொடை - ரூ 60.

வெளியீடு - பன்முக மேடை .

தொ.எண். - 94878 45666

அணிந்துரை - மிக எளிமையான அழுத்தமான வரிகள்

பேரா.முகமது  ரஃபிக் என்கின்ற மானசீகன் நிறுவனர்  அன்றில் இலக்கிய சுற்றம் உத்தமபாளையம்.

என்னுரை - இந்நூலுக்கு உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள் அவர்களின் பெயரையும் செயல் வடிவத்தையும் கூறியிருப்பது சிறப்பு.  உழைத்து நரம்புகள் விம்மி எழுவது போன்ற முன் அட்டை படம் மற்றும் உள் அட்டை படம் வரைந்த ஓவியர் தோழர் ரவி பெலட்டுக்கு வாழ்த்துக்கள்.

சமூகத்தின் மீது அநீதி திணிக்கப்பட துவங்கிய அன்றே சமூகநீதி குறித்த சிந்தனையும் துவங்கிவிட்டது. முன்னேற்றத்திற்கான முனைப்பு கைகூடியிருக்கிறது. திருமாவளவன் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் முரண்கள் குறித்த வளர்ச்சிக்கு தன்னுடைய பார்வையை முன் வைப்பதோடு முரன்களே வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை மிகத்தெளிவாக நிறுவுகிறார்.

யார் நமக்கு நன்மை செய்வார்கள். யார் நம்மை முதுகில் குத்துவார்கள் என்பதை பகுத்து அறிதல் அவசியம். நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான். வாய் சவடால் விடுகின்ற நிறைய தோழர்களை கடந்தும் கவனமாக கையாண்டு களம் காண வேண்டி இருக்கிறது. 

சமயோஜிதம் என்று சொல்லக்கூடிய பிரசன்ஸ் ஆப் மைன்ட் திறனை வளர்த்துக் கொள்வது முக்கியம்.தகவல் பரிமாற்றம் எத்தகைய விளைவுகளை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏற்படுத்திவிடும். புரிதல் அவசியம். ஒரு செயல்திட்டம் குறித்த புரிதலும் முன்னேற்பாடுடன் கூடிய வடிவமைப்பும் உருவாக்குவது அவசியம். தனது குறைகளை பிறரின் விமர்சனங்களில் இருந்து அறிந்திட இயலும் . கல்லடியும் சொல்லடியும் கடமை வாதிகள் தாண்ட வேண்டிய முதற்படி. பொறுமை... சகிப்புத்தன்மை ஆகிய இரு குணங்களை நாம் நம்முடைய இரு கண்கள் போல பாவிக்க வேண்டும்.

தனிநபர் ஒழுங்கு என்பது தனி நலன்களை மட்டுமின்றி பொது நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். சகிக்கும் பெருந்தன்மை பின்பற்றி நல்லொழுக்கம் வளர்ப்போம். ஒருவரின் தன்மானத்தை சீண்டும் வகையில் ஆழ்மனதை கீரும் வகையில் ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது.

இலக்கிய இலக்கண வடிவங்களுக்கும் மிகவும் இன்றியமையாத அடிப்படை தேவையாக விளங்குபவை சொற்களே ஆகும்.தொல் திருமாவளவன் எழுதிய அமைப்பாய் திரள்வோம் ..கருத்தியலும் நடைமுறையும் ..பற்றி நன்கு அலசி ஆராய்ந்து எழுதி உள்ள தோழர் விசாகணை பாராட்டுகின்றேன்.

அவர் மகன் சொன்னது போல/ இது சயின்ஸ் பிக்சன் அல்ல. வாழ்க்கையின் உண்மை தத்துவம் மேலும் மக்களுக்கு பயன்தரும் பல நூல்களை எழுதி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு

வாரம்தோறும் நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி

காலச்சக்கரம் நாளிதழ் 

#54, 3வது குறுக்குத் தெரு, 

டிகேஎம் கல்லூரி பின்புறம்,

கணபதி நகர், வேலூர் - 632002

9360005566

No comments

Thank you for your comments